அழகான ஒட்டகச் சிவிங்கியே... மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படம்!

நடிகை மாளவிகா மோகனன் பாக்கெட் நாவல் திரைப்பட படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் பாக்கெட் நாவல். தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் (TDKF) மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜனுடன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், கண்ணாடியில் இடம்பெற்ற, ‘அழகான ஒட்டகச் சிவிங்கியே...’ என்கிற நடிகையின் புகைப்படமும் உள்ளது. இது, சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. 

Post a Comment