ரசிகர்களால் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் ‘டாக்சிக்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகை நயன்தாரா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் நயன்தாராவின் புதிய லுக்கை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

