தமிழ் சினிமாவில் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அவர், தனது திறமையால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக, ‘அமரன்’ திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில், ‘அமரன்’ அளவுக்கு பெரிய வரவேற்பை இந்தப் படங்கள் பெறவில்லை.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
திரைப்படப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், சிவகார்த்திகேயன் தனது குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவருக்கும் ஆர்த்திக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், திருமண நாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தியின் ஸ்பெஷல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
திருமண நாளில் வெளியான இந்த அழகான புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
