தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சினேகா, திரைப்படங்களில் நடிப்பதுடன் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
அதேவேளை, தனது தொழிலிலும் சினேகா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ‘Snehalaya’ என்ற பெயரில் பட்டுப் புடவை கடையை நடத்தி வரும் அவர், அதன் விளம்பரத்திற்காக விதவிதமான புடவைகளில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், வழக்கமாக புடவையில் போட்டோஷூட் நடத்தி வந்த சினேகா, தற்போது வித்தியாசமான ஸ்டைலிஷ் உடையில் புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சினேகாவின் இந்த புதிய லுக் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
