விஜய்யை இயக்க இருந்த வெற்றிமாறன், சுதா கொங்கரா... படம் நடக்காததற்கு என்ன காரணம் தெரியுமா?

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

அந்த காலகட்டத்தில், இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா ஆகியோரை அழைத்து விஜய் தன்னை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை வழங்கியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இருவரும் விஜய்க்காக கதை மற்றும் திரைக்கதையை தயார் செய்ய சுமார் ஒரு வருடம் தேவைப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த படங்கள் அப்போது நடைபெறாமல் போனதாகவும், விஜய் பின்னர் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்ததாகவும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், வெற்றிமாறன் அல்லது சுதா கொங்கரா விஜய்யை வைத்து படம் இயக்கியிருந்தால், அந்த படத்திற்கு தானே இசையமைத்திருப்பேன் என்றும் ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.

இதனால் விஜய் – வெற்றிமாறன் அல்லது விஜய் – சுதா கொங்கரா கூட்டணி அமையாமல் போனது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மிஸ் என்றே சொல்லலாம்.

Post a Comment