அஜித் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... டாக்குமெண்ட்ரி ட்ரைலர் எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிக்கும் அடுத்த படம் எப்போது வெளியாகும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அஜித் அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் தொடங்கி, தொடர்ந்து ஹைதராபாத்திலும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அஜித்தின் மற்றொரு முக்கிய படைப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அஜித்தின் கார் ரேஸ் அனுபவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட்ரியை இயக்குநர் விஜய் இயக்கியுள்ளார்.

இந்த டாக்குமெண்ட்ரியின் ட்ரைலர் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 3.30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ட்ரைலர் ஹாலிவுட் பாணியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த டாக்குமெண்ட்ரி வரும் அக்டோபர் மாதம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த டாக்குமெண்ட்ரி குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Post a Comment