இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரவு நேர படப்பிடிப்பை முடித்த சிவகார்த்திகேயன், அதிகாலையிலேயே சென்னைக்கு திரும்பியுள்ளார்.
இதற்கு காரணம் அவரது மனைவி ஆர்த்தி தான்.
இன்று திருமண நாள் என்பதால், மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அதிகாலையில் சென்னைக்கு வந்த சிவகார்த்திகேயன், ஆர்த்தியுடன் இணைந்து கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
மனைவியுடன் சிறிது நேரம் செலவிட்ட பிறகு, மீண்டும் மாலையிலேயே மதுரைக்கு கிளம்பிச் சென்று தனது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆர்த்தி மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு பணிகளுக்கு மத்தியிலும் திருமண நாளை மறக்காமல், மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயனின் செயல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
.jpeg)
.jpeg)
