பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது என்றாலே, அதற்கு பல வாரங்களுக்கு முன்பே உத்தேச போட்டியாளர்களின் பட்டியல் என்ற பெயரில் பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகத் தொடங்கிவிடும்.
ஒவ்வொரு சீசனிலும் பிரபலங்கள் முதல் சின்னத்திரை நட்சத்திரங்கள் வரை பலரது பெயர்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெறும். ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெறும் அனைவரும் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், விஜய் டிவியில் விரைவில் தொடங்கவுள்ள பிக் பாஸ் 10வது சீசன் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. போட்டியாளர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிக் பாஸ் 10வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஜாய் கிரிஸில்டா மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான தனிப்பட்ட விவகாரம் கடந்த சில காலமாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், குழந்தையின் தந்தை தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
தற்போது ஜாய் கிரிஸில்டா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் குழந்தைக்கு மொட்டை அடித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஒரு வயது கூட நிறைவடையாத குழந்தையை விட்டுவிட்டு ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனினும், பிக் பாஸ் 10வது சீசனில் ஜாய் கிரிஸில்டா உண்மையிலேயே போட்டியாளராக கலந்துகொள்கிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
அதனால், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவல் உண்மையா அல்லது வழக்கமான பிக் பாஸ் வதந்தியா என்பதை நிகழ்ச்சி தொடங்கும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
