சூப்பர் சிங்கர் DJ பிளாக்கிற்கு கோலாகலமாக நடந்த திருமணம்! வெளியான அழகிய புகைப்படங்கள்

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களை தாண்டி, ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் DJ பிளாக். தனது டைமிங் காமெடி மற்றும் கலகலப்பான கமெண்ட் மூலம் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கி வருகிறார்.

பிளாக் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் சுதன் குமார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, பல பிரபல இசையமைப்பாளர்களின் இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது திருமணம் குறித்த தகவலை புகைப்படம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார் DJ பிளாக்.

அதன்படி, சுதன் குமாருக்கும் ரம்யா என்பவருக்கும் ஆகஸ்ட் 28ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த நிலையில், புதுமணத் தம்பதியின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், புதிய ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

DJ பிளாக் - ரம்யா ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


Post a Comment