நாஞ்சில் விஜயனுக்கு வைஷ்ணவி பதிலடி!என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் நாஞ்சில் விஜயன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர், குறிப்பாக பெண் வேடங்களில் நடித்து தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி மேடை நிகழ்ச்சிகள், சொந்த தொழில் என பிஸியாக இருந்து வரும் நாஞ்சில் விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தற்போது சோகமான சம்பவம் நடந்துள்ளது.

சமீபத்தில் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், திருநங்கை சகோதரி வைஷ்ணவியிடம் தான் தோற்றுவிட்டதாகவும், இருவரையும் தொடர்புபடுத்தி பலரும் பேசிய போதெல்லாம் தனது மனைவி தன்னுடன் உறுதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஏற்பட்ட ஒரு சிறிய சண்டை காரணமாக தற்போது மனைவியை பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாஞ்சில் விஜயனின் இந்த பதிவுக்கு வைஷ்ணவி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், “என்னுடைய சாபத்தால் மனைவியை பிரிந்துவிட்டேன் என்கிறீர்கள்” என குறிப்பிட்டு தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், “கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன். நான் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடினேன். கணவன், மனைவி பிரிய வேண்டும் என்று ஒருபோதும் சபிக்கவில்லை” என வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தான் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றதும், நாஞ்சில் விஜயனிடம் பேசியதும், இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாஞ்சில் விஜயனின் பதிவுக்கு வைஷ்ணவி அளித்துள்ள இந்த பதிலடி தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Post a Comment