தமிழில் ‘மதராசப்பட்டினம்’, ‘தெறி’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை எமி ஜாக்சன். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், ஹாலிவுட்டிலும் ‘சூப்பர்கேர்ள்’ உள்ளிட்ட படைப்புகளில் நடித்துள்ளார்.
எமி ஜாக்சன் முதலில் ஜார்ஜ் பனாயிட்டோவை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றதுடன், அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. பின்னர் சில காரணங்களால் இருவரும் 2021ஆம் ஆண்டு பிரிந்தனர்
இதையடுத்து, ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்த எமி ஜாக்சன், கடந்த 2024ஆம் ஆண்டு இத்தாலியில் அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2025ஆம் ஆண்டு ஆஸ்கர் அலெக்சாண்டர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், எமி ஜாக்சன் தனது இரண்டாவது திருமண நாளை கணவர் எட் வெஸ்ட்விக்குடன் கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள எமி ஜாக்சன், நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுப்பதுதான் சிறந்த முடிவு என்பதை தற்போது உணர்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், காதல், குழந்தைகள், சாகசங்கள், சில குழப்பமான முடிவுகள் என கடந்த இரண்டு ஆண்டுகளும் அளவற்ற மகிழ்ச்சியுடன் சென்றதாகவும், இந்த வாழ்க்கையை வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்றும் எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
எமி ஜாக்சனின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவருக்கு திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
.png)