பிக்பாஸ் 10ல் இப்படியொரு டுவிஸ்ட்டா!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

சீசன் தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்களுக்கு இடையேயான சண்டை மற்றும் சர்ச்சைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அண்மையில் Leader Exit Poll மூலம் லட்சுமி ப்ரியா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த எலிமினேஷன் நியாயமற்றது என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து இந்த வாரம் மேலும் எலிமினேஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனந்தி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 10-ல் மற்றொரு அதிரடி திருப்பம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சாவின்யா, ஜாவத் மற்றும் லட்சுமி ப்ரியா ஆகிய மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உண்மையா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரவில்லை.

Post a Comment