ஜேசனை பார்த்ததும் விஜய் ஞாபகம் வந்தது” – சிரஞ்சீவி சொன்ன காரணம்

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பர விழா ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிக்கும் இப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஜேசன் சஞ்சய் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ஜேசன் சஞ்சயை முதன்முறையாக சந்தித்தபோது, அவரது தந்தை விஜயின் ஆரம்பகால தோற்றம் நினைவுக்கு வந்ததாக சிரஞ்சீவி தெரிவித்தார்.

மேலும், “விஜய் மிகப்பெரிய நடிகராக இருக்கும்போது, நீ ஏன் நடிப்பை தேர்வு செய்யாமல் இயக்குநராக வேண்டும் என நினைத்தாய்?” என ஜேசனிடம் தான் கேட்டதாகவும் கூறினார்.

அதற்கு சிறுவயது முதலே கதை எழுதுவதிலும், திரைப்படங்களை இயக்குவதிலும் தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாக ஜேசன் சஞ்சய் தெரிவித்ததாக சிரஞ்சீவி பகிர்ந்துகொண்டார்.

ஜேசனின் இயக்குநர் திறமை அவரது தந்தை விஜயிடம் இருந்து மட்டுமல்லாமல், அவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாட்டி ஷோபாவிடமிருந்தும் வந்துள்ளதாக சிரஞ்சீவி பாராட்டினார்.

மேலும், விஜய் திரையுலகில் பெற்ற வெற்றியைப் போலவே, ஜேசன் சஞ்சயும் ‘சிக்மா’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment