ஒன்றினையும் ரவி,கெனிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

 தமிழ் திரையுலகில் நடிகராக அறியப்பட்ட ரவி மோகன், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். தனது நீண்ட நாள் கனவான தயாரிப்பு நிறுவனத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தொடங்கியுள்ள அவர், அதன் முதல் படைப்பாக ‘Ordinary Man’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருகிறார். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘Ordinary Man’ படத்தின் இசையமைப்பாளர் குறித்த புதிய தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு ஹைட்ரோ இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் தற்போது, பாடகி கெனிஷா பிரான்சிஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்திற்கான இசைப் பணிகளையும் அவர் தொடங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எனினும், கெனிஷா பிரான்சிஸ் அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை ரவி மோகன் அல்லது படக்குழு இதுவரை உறுதி செய்யவில்லை.

எனவே, படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்தத் தகவலை உறுதிப்படுத்தப்பட்டதாகக் கருத முடியாது.

Post a Comment