இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சென்னை தரமணியில் நடைபெற்ற படத்தின் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது, சூரியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றிக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த சூரி, “நீங்கள் தந்த வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு என் இஷ்டப்படி ஆட மாட்டேன். வெற்றியை மரியாதையோடு ஏற்றுக்கொண்டு, அடுத்த வேலைக்காக எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பேன்” என தெரிவித்தார்.
சூரியின் இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
