விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ் - ‘பத்தா’ டிரெய்லர் இன்று வெளியீடு!

 பாலாஜி தரணிதரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பத்தா’.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினி ஒன் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ‘செல்லமே மகளே’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியானது.

இந்நிலையில், ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Post a Comment