நடிகர் விஜய்யின் மகனும், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருப்பவருமான ஜேசன் சஞ்சய், விஜய் நடித்த எந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புகிறார் என்பது குறித்து பேசியுள்ளார்.
‘சிக்மா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், ‘போக்கிரி 2’ போன்ற மாஸ் ஆக்ஷன் படமா அல்லது ‘சச்சின் 2’ போன்ற காதல் கதையா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், “பத்ரி 2 செய்ய விரும்புகிறேன். அந்தப் படத்தில் ஒரு சிக்மா உணர்வு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்த அவர், அப்பா விஜய்யுடன் பல படங்களை பார்த்துள்ளதாகவும், குறிப்பாக ‘போக்கிரி’ திரைப்படம் தன்னுடைய நினைவில் எப்போதும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
விஜய்யின் படங்களில் ‘பத்ரி 2’ இயக்க வேண்டும் என்ற ஜேசன் சஞ்சய்யின் விருப்பம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
.png)