"என்னை கொச்சைப்படுத்திப் பேசுவதில் என்ன ஆனந்தம்"?

இந்தி தொலைக்காட்சி தொடரான ‘நாகினி’ மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய், தன்னைப் பற்றி தொடர்ந்து வெளியாகும் விமர்சனங்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் பேசப்பட்டு வரும் நிலையில், கணவர் விவாகரத்து, காதல் உறவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், நடிகை திஷா பதானியுடனான தனது நட்பு குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து பேசிய மவுனி ராய், தன்னை மிகவும் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

“ஒருவரை கொச்சைப்படுத்திப் பேசுவதில் அப்படி என்ன ஆனந்தம் கிடைக்கிறது? ஒருவரது மனம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? இதையும் கடந்து செல்கிறேன். அவ்வளவுதான்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தன்னைச் சுற்றி வரும் விமர்சனங்கள் குறித்து மவுனி ராய் வெளிப்படையாக பேசியிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.

Post a Comment