சின்னத்திரை நடிகை தீபிகா வெங்கடாச்சலம், தான் தொடர்ந்து செய்து வரும் உதவிகள் குறித்து பேசியிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.
சிறு வயது முதலே மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை தனது தாய் கற்றுக்கொடுத்ததாக தெரிவித்துள்ள அவர், தற்போது ஒவ்வொரு மாதமும் தேவையுள்ளவர்களுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை உதவி செய்து வருவதாக கூறியுள்ளார்.
தன்னால் முடிந்த அளவில் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் உதவி செய்துள்ளதாக குறிப்பிட்ட தீபிகா, “மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் எல்லாம் கொடுக்கிறோமே... முதல்வராகலாமா?” என ஒரு கட்டத்தில் நினைத்ததாகவும் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
