நயன்தாராவை பார்த்ததும் கண்ணீர் விட்ட ரசிகை..! அடுத்த நொடியே நெகிழ வைத்த சம்பவம்

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஹாய்’. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், அம்ருதா சீனிவாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை கமலா திரையரங்கில் ‘ஹாய்’ திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், நடிகை நயன்தாரா திடீரென திரையரங்கிற்கு நேரில் சென்றுள்ளார்.

நயன்தாரா திரையரங்கிற்குள் வந்ததை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து ஆரவாரத்துடன் அவரை வரவேற்றுள்ளனர். தொடர்ந்து ரசிகர்களுடன் நயன்தாரா உரையாடிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவரை மேடைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

நயன்தாராவின் அழைப்பை ஏற்று மேடைக்கு சென்ற அந்த ரசிகை, தனக்கு பிடித்த நடிகையை நேரில் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியுள்ளார்.

இதனைப் பார்த்த நயன்தாரா, உடனடியாக அந்த ரசிகையை அன்போடு கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

நயன்தாராவின் இந்த எதிர்பாராத அன்பை பார்த்த அங்கிருந்த ரசிகர்களும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது, இந்த அழகான தருணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Post a Comment