அஜித்தின் கார் பந்தயத்தில் விஜயோடு திரிஷா ? அதிர்ச்சியில் இரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை காண திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், இன்று சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்தப் போட்டியில் அஜித்குமார் பங்கேற்க உள்ளதால், விஜய் நேரில் சென்று போட்டியை தொடங்கி வைப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அஜித்தின் கார் பந்தயத்தை காண நடிகை ராதிகா சரத்குமாரும் லண்டன் சென்றுள்ளார். அஜித்தை சந்தித்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, அவரது கார் பந்தய ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார்.

மேலும், ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திரிஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

திரிஷா தற்போது படப்பிடிப்புக்காக லண்டனில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரும் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் காண வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித்துடன் திரிஷா இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்பு தற்போது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

Post a Comment