மதுமிதாவுக்கு திருமணம்! காதலரை கரம்பிடிக்கிறார் – தேதி அறிவிப்பு

தமிழ் சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் மதுமிதா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’ சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், மதுமிதா தனது காதலர் பாலாஜி திருமாலுடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

தற்போது தனது திருமண தேதியையும் அவர் அறிவித்துள்ளார்.

அதன்படி, வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பாலாஜி திருமாலை மதுமிதா திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரசிகர்களும் நெட்டிசன்களும் மதுமிதாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

Post a Comment