நடிகை ராஷ்மிகா மந்தனா, 400 குடும்பங்களின் அடுத்த ஓராண்டுக்கான மளிகைப் பொருட்கள் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சிறிய உதவிகூட ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களும் செய்ய முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘ரணபாலி’ திரைப்படத்தில் தான் ஏற்ற ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்துடன் தனது குணாதிசயங்கள் ஒத்துப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் செய்துவரும் நற்பணிகளைப் பொதுவெளியில் பகிர்வதன் நோக்கம், மற்றவர்களையும் உதவிசெய்யத் தூண்டுவதே எனக் குறிப்பிட்ட ராஷ்மிகா, குடும்பங்களின் மகிழ்ச்சியான சிரிப்பே தமக்கு விலைமதிப்பற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
