‘ராமாயணா’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு! பிரம்மாண்ட காட்சிகளால் ரசிகர்கள் வியப்பு

 

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகம் 2026 நவம்பர் 5ஆம் திகதியும், இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நிமிடங்கள் 36 விநாடிகள் கொண்ட டிரெய்லரில் ராமர்–ராவணன் மோதல், சீதையைக் கடத்தும்போது ஜடாயு எதிர்த்துப் போராடும் காட்சி மற்றும் ராமர்–சீதை இடையிலான உணர்வுபூர்வமான தருணங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரம்மாண்டமான போர்க் காட்சிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

Post a Comment