தீபாவளி ரேசில் களமிறங்கும் 5 படங்கள்! வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகாத நிலையில், புதிய கதைகளுடன் நான்கு தமிழ்ப் படங்களும், பிரமாண்ட இந்திப் படமான ‘ராமாயணா’வும் திரைக்கு வரத் தயாராகியுள்ளன.

சூர்யா நடிப்பில் ஜீத்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’, நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’, விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’, பிரபுதேவாவின் ‘மூன் வாக்’ ஆகிய தமிழ்ப் படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளதுடன், ‘மூன் வாக்’ திரைப்படத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபுதேவா–ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது.

மறுபுறம், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகமும் நவம்பர் 5ஆம் திகதி வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் படங்கள் களமிறங்கத் தயாராகியுள்ள நிலையில், இந்தத் தீபாவளி திரைப்போட்டியில் ரசிகர்களின் வரவேற்பையும் வசூலையும் அதிகம் பெறப்போகும் படம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Post a Comment