இன்னும் இளமை குறையவே இல்லை!” – நடிகை மீனாவின் புதிய புகைப்படங்கள் வைரல்

 தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை மீனா. பல தலைமுறை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.

சிறு வயதிலேயே திரையுலகில் அறிமுகமான மீனா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.


குறிப்பாக, 1990களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து திரையுலகில் பயணித்து வரும் மீனா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் சினிமா தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

புகைப்படங்களில் மீனா அழகாகவும் இளமையாகவும் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அவரது பதிவிற்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Post a Comment