யாஷுக்கு வெறுப்பல்ல, அன்பே கிடைத்தது! – சாய் பல்லவி

‘ராமாயணா’ திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் யாஷை, நடிகை சாய் பல்லவி பாராட்டியுள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய அவர், ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் வெறுப்பைச் சந்திக்க நேரிடும் எனப் பலரும் நினைப்பார்கள். ஆனால், யாஷ் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வெறுப்புக்குப் பதிலாக அனைவரின் அன்பையும் பெற்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சீதையாக நடித்தபோது ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடிப்பதற்காகத் தியானம் செய்து பிரார்த்தித்ததாகவும் சாய் பல்லவி கூறியுள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

Post a Comment