தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜி.வி.பிரகாஷ், அஜித் மற்றும் விஜய்யின் திரைப்பயணம் மற்றும் அவர்கள் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் குறித்து தனது பார்வையை பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,“ஒரு இடத்தில் பீக்கில் இருந்துவிட்டு, மற்றொன்றைத் தேடிச் செல்வது... அஜித் சாராக இருந்தாலும் சரி, விஜய் சாராக இருந்தாலும் சரி... இது நடக்கவே நடக்காது என்று நினைத்ததைக் கூட நடத்திக் காட்டிவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அஜித் மற்றும் விஜய் இருவரிடமிருந்தும் தான் ஒரு முக்கியமான விஷயத்தை கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரே இடத்தில், ஒரே மாதிரியான பாதையில், பாதுகாப்பான வளையத்துக்குள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருவரிடமும் இல்லை என்றும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து,“அதைத்தான் நானும் நினைக்கிறேன். இதை இவர்களிடமிருந்து ஒரு பெரிய உத்வேகமாக நானும் எடுத்துக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் மற்றும் விஜய் இருவரும் தங்களுக்கென வெவ்வேறு பாதைகளை தேர்வு செய்து, அந்தப் பாதையில் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் பாராட்டியுள்ளார்.
உச்சத்தில் இருக்கும்போதே புதிய பாதைகளை தேர்வு செய்து, தங்களது வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுத்த அஜித் மற்றும் விஜய்யை ஜி.வி.பிரகாஷ் உதாரணமாக குறிப்பிட்டிருப்பது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
.jpg)