முட்டாளின் பதிவுக்கு பதில் சொல்லாதீர்கள் - சூர்யா சொன்ன பதிலால் வியந்த ரசிகர்கள்

நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், சென்னை பரணிப்புத்தூரில் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறையான பதிவுகளுக்கு பதிலளித்து தங்களது நேரத்தையும், ஆற்றலையும் வீணடிக்க வேண்டாம் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

“அன்பை மட்டும் விதைப்போம். யாராவது ஒரு பதிவை போட்டார்கள் என்பதற்காக நாமும் பதிலளிக்கும்போது தான் நாம் காயப்படுகிறோம். நாம் நாமாகவே இருப்போம். அவர்களை மாற்ற முயற்சி செய்வதைவிட, உங்களுக்கு பிடித்ததை தொடர்ந்து செய்யுங்கள். அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பை மட்டும் விதைப்போம்” என சூர்யா தெரிவித்தார்.

இதனிடையே, சூர்யாவின் அரசியல் வருகை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தாலும், இதுவரை அவரது தரப்பில் அரசியல் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Post a Comment