நடிகர் விஷால், புதிய திரைப்படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விதமாக காயமடைந்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் முக்கியமான சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் விஷால் நடித்தபோது, எதிர்பாராத விதமாக அவரது முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயம் குணமடைய குறைந்தது 3 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய பொதுக்குழு மற்றும் ஆண்டறிக்கை கூட்டத்தில் விஷால் நேரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பொதுக்குழு கூட்டத்தில் நேரில் கலந்துகொள்ள முடியாதது மிகவும் வருத்தமாக உள்ளது. உடல்நிலை ஒத்துழைக்காததால் வர முடியாவிட்டாலும், எனது எண்ணங்களும் சிந்தனைகளும் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருடனும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
