அவர் பார்த்துக்கொள்வார்”.. தமிழ் ராக்கர்ஸ் குறித்து கார்த்தி சொன்னது என்ன?

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘Sardar 2’ திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் திரைப்படங்கள் சட்டவிரோதமாக வெளியாவதைத் தடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கார்த்தி, இந்தப் பிரச்சினை குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் தான் பேசியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், “அண்ணா, இந்தப் பிரச்சனையை பார்த்துக்கொள்ளுங்கள்” என அவரிடம் கூறியதாகவும், இந்த விவகாரத்தை அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், நல்ல படங்களை கொடுத்து அவை வெற்றி பெறுவது மட்டுமே தனது விருப்பம் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Post a Comment