சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘Jailer 2’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி வரும் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், ‘Jailer 2’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. படம் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், படத்தின் சரியான வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினரால் வெளியிடப்பட வேண்டியுள்ளது.
.jpg)