சினிமா நடிகைகளுக்கு இணையாக, தற்போது சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில், பிரபல தொகுப்பாளர் அசார், தனது YouTube சேனல் மூலம் பல பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை ஷாலினியை அவர் நேர்காணல் செய்துள்ளார்.
இந்த நேர்காணலின் போது, அசார் ஷாலினியிடம், “அமர்க்களம் திரைப்படம் அஜித்திற்கு எத்தனையாவது படம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், அதற்கான பதில் ஷாலினிக்கு தெரியாமல் போயுள்ளது.
இதையடுத்து, அசார் அவரிடம் ஒரு வித்தியாசமான சவாலை முன்வைத்துள்ளார்.
“டாக்சிக் படத்தில் நயன்தாரா சிகரெட் பிடிக்கும் காட்சியை ரீ-கிரியேட் செய்ய வேண்டும்” என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு ஷாலினியும் கொஞ்சமும் தயங்காமல் அந்த காட்சியை ரீ-கிரியேட் செய்துள்ளார்.
இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பொதுவெளியில் வெளியிடப்படும் ஒரு வீடியோவில் இப்படியான காட்சியை செய்யலாமா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில், ஷாலினி எந்த தயக்கமும் இல்லாமல் சவாலை ஏற்றுக்கொண்டது ஆச்சரியமாக இருந்ததாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
