கயாடு செய்த ஒரு சின்ன விஷயம்… செம ட்ரெண்ட்! - அருகில் இருந்த நடிகை செய்த செயல்

தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வேகமாக வளர்ந்து வருகிறார் நடிகை கயாடு.

சூர்யா, நானி, துல்கர் சல்மான் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் கயாடுவின் மார்க்கெட்டும் தற்போது உயர்ந்துள்ளது.

அதிலும், இவர் நடிப்பில் வெளியான ‘ட்ராகன்’ மற்றும் ‘இதயம் முரளி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, கயாடுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கயாடு நடித்துள்ள ‘ஐயம் கேம்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை சம்யுக்தா, நடிகர் கதிர் மற்றும் கயாடு உள்ளிட்டோர் ஒன்றாக நின்றிருந்தனர்.

அப்போது, ஒரு தண்ணீர் பாட்டிலை ஒருவர் மற்றொருவரிடம் கொடுத்து, அனைவரும் பாட்டிலில் வாய் வைக்காமல் தண்ணீர் குடித்துள்ளனர்.

ஆனால், கயாடு தண்ணீர் குடிக்கும் போது தெரியாமல் பாட்டிலில் நேரடியாக வாய் வைத்து குடித்துவிட்டார்.

அதன்பிறகு, “இதை எல்லோரும் குடிக்க வேண்டுமே…” என ஒரு நொடி யோசித்த கயாடு, உடனே மன்னிப்பு கேட்டுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் “பரவாயில்லை” என்று கூறியுள்ளனர்.

ஆனால், அடுத்ததாக நடிகை சம்யுக்தா செய்த விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உடனே அந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிய சம்யுக்தா, அதை துடைத்துவிட்டு நடிகர் கதிரிடம் கொடுத்துள்ளார்.

இந்த சின்ன தருணத்தைப் பார்த்த ரசிகர்கள், கயாடுவின் தயக்கத்தையும், சம்யுக்தாவின் உடனடி செயலையும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்டாகி வருகிறது.

Post a Comment