விஜயா? ரஜினியா? ஒருவரை ஒருவர் மோதும் அதிரடி - ரசிகர்களுக்கு Suspense

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரணபாலி’. 1850-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்கியுள்ளார். பல்வேறு உண்மைச் சான்றுகள் மற்றும் வாய்மொழி வரலாறுகளின் அடிப்படையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், ‘தி மம்மி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் முதலில் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, ‘ரணபாலி’ திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் தேவரகொண்டாவின் படத்திற்கு ரிலீஸிலேயே கடுமையான போட்டி காத்திருக்கிறது. காரணம், ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15ஆம் தேதியும், தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரே நேரத்தில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் களமிறங்குவதால், பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment