அஜித் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால், சினிமாவில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு ‘டேர்டெவில்’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை ஷாலினி அஜித் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் ஷாலினி அஜித்தை ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அந்த வாய்ப்பை ஷாலினி அஜித் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அஜித்தை திருமணம் செய்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய ஷாலினி, தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ‘டேர்டெவில்’ படத்தில் ஷாலினி அஜித்தை திரையில் பார்க்கலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
